Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஏஐ ஏஜெண்ட் கண்காணிப்பால் ஐ.டி. நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்பு

ஏஐ ஏஜெண்ட் கண்காணிப்பால் ஐ.டி. நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்பு

இந்த ஏஐ ஏஜெண்டுகள் மனிதர்களின் தலையீடு இன்றி தாங்களாகவே முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவை.

பகிரவும் WhatsApp Facebook

ஏஐ ஏஜெண்ட் கண்காணிப்பு, இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு புதிய வணிக வாய்ப்பாக உருவெடுத்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில், பல்வேறு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் சேவை, நிதி மேலாண்மை, மனிதவள மேம்பாடு மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற பணிகளுக்கு மனிதர்களுக்குப் பதிலாக 'ஏஐ ஏஜெண்டுகளை' முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. 

இந்த ஏஐ ஏஜெண்டுகள் மனிதர்களின் தலையீடு இன்றி தாங்களாகவே முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவை. இருப்பினும், சில நேரங்களில் இந்த ஏஜெண்டுகள் தவறான அல்லது ஒருதலைபட்சமான முடிவுகளை எடுப்பது, நிறுவனங்களின் ரகசியத் தரவுகளை கசியவிடுவது அல்லது தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வரம்புகளை மீறிச் செயல்படுவது போன்ற அச்சுறுத்தல்களும் எழுந்துள்ளன.

இதன்காரணமாக, இந்த ஏஐ ஏஜெண்டுகளின் செயல்பாடுகளை 24 மணி நேரமும் கண்காணித்து, அவை சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்யும் 'கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மென்பொருள்களின்' தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா மற்றும் காக்னிசண்ட ஆகியவை இந்த ஏஐ கண்காணிப்புத் தளங்களை உருவாக்குவதில் தங்களது கவனத்தைத் தீவிரமாகத் திருப்பியுள்ளன.

பாரம்பரிய ஐடி சேவைகளுக்கான தேவை உலகளவில் சற்று மந்தமடைந்துள்ள சூழலில், இந்த புதிய 'ஏஐ ஏஜெண்ட் கண்காணிப்பு' சந்தையானது வரும் ஆண்டுகளில் பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு பிரம்மாண்ட துறையாக மாறும் என்றும், இது இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாயை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

முந்தைய செய்தி
A US cruise ship ends global voyage in Asia due to fuel costs
அடுத்த செய்தி
Solar rooftop scheme gets 30,000 applications in three weeks: Minister

தொடர்புடைய செய்திகள்